அராபிய இரவுகளும் பகல்களும்

நாகிப் மாஃபஸ் தமிழில் : சா.தேவதாஸ் ‘நாகிப் மாஃபஸின்’ இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.

உருமாற்றம்

ஃப்ரான்ஸ் காஃப்கா தமிழில் : பேரா. ச.வின்சென்ட் நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார். ரூ.200/-

வடக்கேமுறி அலிமா

  கீரனூர் ஜாகிர்ராஜா  இந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள். இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். ₹ 100.00

லைஃப் ஆஃப் பை

யான் மார்ட்டெல் தமிழில்: சின்னத்தம்பி முருகேசன் ”என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா? அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்? உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எத்ற்கும் பயன்படாதா? பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன? விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது? சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?”

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

கணியன்பாலன் சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து,புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்கப்பிரதிகளைக் கணியன்பாலன் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ரூ. 950/-

இந்தியாவில் சாதிகள்

டாக்டர் அம்பேத்கர் உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. ரூ. 100.00

அமரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்

அ. மார்க்ஸ் அமெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ளதே இந்த 123 ஒப்பந்தம்… ரூ. 40/-

ஃப்ராய்ட்

ஜோனத்தன் லியர் தமிழில்: ச. வின்சென்ட் மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். ரூ. 250.00

ஒற்றை வைக்கோல் புரட்சி

மசானபு ஃபுகோகா தமிழில் :பூவுலகின் நணபர்கள் புதிதாய் வருபவர்கள் இயற்கை வேளாண்மை உணர்வதற்கு ஏற்ற நூல். ரூ.130/-

இயற்கை வழியில் வேளாண்மை

பசுமைத் தத்துவத்தின் கோட்பாடு மற்றும் செயல்முறை மசானபு ஃபுகோகா இந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் ஃபுகோகாவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கும் கூட கை கொடுக்கவல்லது. ரூ.500/-