பிலோமி டீச்சர்

வா.மு.கோமு காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான். ரூ.180/-

பச்சைப்  பறவை

  கௌதம சித்தார்த்தன் அவள் கைகளில் குத்திருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி. நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் திரும்பிய அவளது கண்களில் ஒளிர்ந்த பறவையின் முறுவல் அசையாடிக் கொண்டிருந்த புலனில், அவளைப் பற்றிய விபரீத உணர்வுகள் தனக்குள் அடரக் காரணமென்ன என்று யோசித்தான். அவளது கைகளில் சுருண்ட பச்சைக் கொம்புகள். வட்டச் சமைவுகளாய்ப் புரண்டிருந்த அதன் ஈர்ப்பு விசை அவனைக் கொளுவியிழுத்த சற்றைக்கெல்லாம் கண்டான், அவள் உடல்மீது எழுதியிருந்த புதிர்மொழியின் கண்ணிகளில் தன் கால்கள் நுரைதள்ளிக் கொண்டிருப்பதையும், ஓயாமல் எழுதிச் செல்லும் ஒற்றை இறகையும். ரூ.130

தவளைகள் குதிக்கும் வயிறு

வா.மு.கோமு தொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பிவிட்டுத் தான் தொப்புள் சுருங்கியது. ரூ.230/-

செம்பருத்தி பூத்தவீடு

கீரனூர் ஜாகிர்ராஜா எதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். ரெண்டு ஜடையிலயும் மயிலாத்தா வச்சிருந்த மாதிரி செக்கச் செவேர்னு ஒத்தச் செம்பருத்திப் பூ நாலஞ்சு. ரூ.140/-

குன்னூத்தி நாயம்

ஹரிகிருஷ்ணன் ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் ரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, எழுத்தாளன் என்பதை விட கூத்துக்கலைஞன் என்று சொல்லி கொள்வதே மிக உவப்பாக இருக்கிறது என சொல்லிக் கொள்ளும் ஹரிகிருஷ்ணனின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ரூ.120/-

காஃபிர்களின் கதைகள்

கீரனூர் ஜாகிர் ராஜா இந்தியாவைப் போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இதைப் போல நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது. ரூ.160/-

கனவினைப் பின் தொடர்ந்து…

தா.வெ. பத்மா தமிழில் : ஜே. ஷாஜஹான் இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயன்றுள்ளேன். ரூ.100/-

எருது : உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

மொழியாக்கம் : கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்டிராதவர்களையும் பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கும் மனிதர்களின் படைப்புகளையும் முன்வைத்து உரையாடுகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள். ரூ.120/-

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

வா.மு. கோமு இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரூ.100/-

நாளைக்கும் வரும் கிளிகள்

ரூ.140/- பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர். தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது. இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை.