தம்மபதம்

யாழன் ஆதி தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். ரூ.130/-  

வந்தாரங்குடி

கண்மணி குணசேகரன் எண்பதுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த இருபெரும் திருப்பங்களின் ஊடே பயணிக்கும் நாவல். ஒன்று 69 சதவிகித இட ஒதுக்கீடுக்காக வன்னியர் சங்கம் நிகழ்த்திய மாபெரும் சாலை மறியல் போராட்டம். இரண்டு, நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்துக்காக பல கிராமங்களை விரட்டியடிக்கப்பட்ட சம்பவம். இரண்டிலும் சம்பந்தப்பட்ட பெருவாரியான வன்னிய சமுதாய மக்களின் இழப்புகளைச் சுற்றிச் சுழலும் நாவல்.

கடவுள் ஒரு கற்பனையே

புரட்சிகர மனித வரலாறு ஏ.எஸ்.கே ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

  யுகியோ மிஷிமா தமிழில் : கார்த்திகைப் பாண்டியன் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது

அராபிய இரவுகளும் பகல்களும்

நாகிப் மாஃபஸ் தமிழில் : சா.தேவதாஸ் ‘நாகிப் மாஃபஸின்’ இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.

உருமாற்றம்

ஃப்ரான்ஸ் காஃப்கா தமிழில் : பேரா. ச.வின்சென்ட் நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார். ரூ.200/-

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸை பற்றி சிறிதும் பெரிதுமாகப் பல நூல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னையின் சமீபத்திய 50 ஆண்டு கால மாற்றங்களைச் சொல்லும் சிறிய நூல். சென்னையில் ஒருவர் தனியாக ரயில் வைத்திருந்தார் என்கிற தகவலில் இருந்து சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மிருகக் காட்சிசாலையில் இருந்த எம்.ஜி.ஆர். வளர்த்த சிங்கம் வரை பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறது. ஒரு நகரம் நம் கண் முன்னாலேயே எப்படி மாறிப் போயிருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவைக்கும் விறுவிறுப்பான நூல்.

வடக்கேமுறி அலிமா

  கீரனூர் ஜாகிர்ராஜா  இந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள். இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். ₹ 100.00

லைஃப் ஆஃப் பை

யான் மார்ட்டெல் தமிழில்: சின்னத்தம்பி முருகேசன் ”என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா? அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்? உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எத்ற்கும் பயன்படாதா? பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன? விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது? சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?”