குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா – கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது. ரூ.150
விருதுநகர் எம். கண்ணன் வெங்காய விலை உயிர்வீண் பின்னணி என்ன?அலசுகிறது இந்நூல். ரூ.25/-
ச. தமிழ்ச் செல்வன் அரசியல் என்றால் என்ன?அதை ஏன் பலரும் சாக்கடை என்று சொல்கிறார்கள்?அரசியலின் வரலாறு என்ன?அரசு என்பதன் பொருள் என்ன?இப்படியான எளிய கேள்விகளோடு துவங்கும் புத்தகம் அரசு என்னும் அடக்குமுறைக்கருவி மனித குல வரலாற்றில் தோன்றிய கதையிலிருந்து இடதுசாரி என்றால் என்ன?வலது சாரி என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு விவாத பாணியில் விளக்கம் சொல்கிறது.விதவிதமான ஆட்சி முறைகள் பற்றிப் பேசி ஜனநாயகம் என்பதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ அரசியலை சமகால கட்சி அரசியலோடு இணைத்து விளக்குகிறது.அரசியல் பற்றி சமீபத்தில் வந்துள்ள இந்த எளிய புத்தகத்தில் கலாச்சார அரசியல் பற்றியும் முதலாளித்துவத்தை ஆவேசமாக எதிர்க்கும் பாட்டாளி வர்க்கம் கருத்து ரீதியாக அதே முதலாளித்துவத்தின் கலாச்சார நிறுவனங்களிடமே மாட்டிக்கொண்டிருக்கும் யதார்த்-தம் பற்றியும் அதற்கெதிராக பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சார அரசியல் பற்றியும் பேசுகிறது. ரூ.20/-
ஈழவாணி நாட்டார் பாடல்களில், குறிப்பாக ஈழத்து நாட்டார் பாடல்களில் உள்ள பன்மைத்துவம் வீறுடன் வெளிப்படுமாறு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. – கலாநிதி ந.இரவீந்திரன் ஈழத்தில் நிலவிய தாலாட்டு முதல் ஒப்பாரி முடிய அனைத்துப் பாடல்களையும் ஒரே தொகுப்பாக, ஒரே நூலாகத் தந்திருக்கும் ஈழவாணியின் முயற்சி பாராட்டிற்குரியது. – கழனியூரன் ரூ.180/-
கி. ராஜநாராயணன் கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒருபுறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை. ரூ.290/-
கழனியூரன் ‘நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக்கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கின்றது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்கதைகள். நகைச்சுவை, அழுகை, மருள்க்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைகளின் கலவையாக இக்கதைகள் திகழ்கின்றன. 111கதைகள் கொண்ட இப்பெரும் தொகுதி மக்கள் மொழியில் உறைந்து கிடக்கும் மண்ணின் கதைகளின் அரிய களஞ்சியமாக கழனியூரனின் கடும் உழைப்பில் உருவாகியிருக்கிறது. ரூ.175/-
சஃபி நூற்றாண்டு காலங்களாக சூஃபி மரபின் அடிப்படைகளை கற்பிக்கும் வழிமுறையாக சூஃபி கதைகள் இருந்திருக்கின்றன. உலகின் மாபெரும் மதங்களும் வழிபாட்டு முறைகளும் அடிப்படையில் வலியுறுத்தும் ஆதாரமான உண்மை ஒன்றே என்று பெரும்பாலான சூஃபிக்கள் கருதுகின்றனர். இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இந்தக் கதைகள் அங்கதமும் மறைபொருளும் ஆழ்ந்த தத்துவ நோக்கும் கொண்டவை மட்டுமல்ல, நம் மனதின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் ஏற்படுத்துபவை. ரூ.250/-
சஃபி வாழ்க்கை பற்றி சூஃபிகளின் பார்வைகளை, மதிப்பீடுகளைப் பரப்பவே உருவாக்கப்பட்டவை முல்லா நஸ்ருத்தீனின் கதைகள். நகைச்சுவைத் துணுக்குகள் வழியாக சூஃபி மரபின் இலக்குகளை அடைந்தது தத்துவ வரலாற்றில் நடந்த ஓர் அதிசயமான சாதனை என்று அறிஞர்கள் கருதுவர் இந்தக் கதைகள் கற்பனையாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கட்டும், அவை உண்மையைப் பிரகாசிக்க வைக்கக் கூடியவை. ரூ.160/-
எஸ். ராமகிருஷ்ணன் நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது.. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை முதல்முறையாக இந்தப் புத்தகத்தில்தான் அச்சேறுகின்றன. ரூ.110/-
சுஜாதா சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன. ரூ.140/-