கலகம் காதல் இசை

சாரு நிவேதிதா உலக இசைப் பரப்பின் சில மகத்தான வடிவங்களையும் கலைஞர்களையும் பற்றி விவாதிக்கும் இந்நூல் மலையாளத்தில் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தைப் பெற்றது. இவை இசையின் பரவசத்தையோ கலைஞர்களின் மகோன்னதத்தையோ பாடும் நூல் அல்ல. மாறாக அந்தந்தச் சமூக, பண்பாட்டு, அரசியல் வெளிகளில் இந்தக் கலைஞர்கள் ஏற்படுத்திய குறுக்கீட்டினையும் அதன் ஊடாக அந்தச் சமூகங்களின் உளவியல் மற்றும் அரசியல் பண்பாட்டினையும் முன்வைக்கிறது.

வரம்பு மீறிய பிரதிகள்

சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது. ரூ.170/-

அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே

எம்.ஜி.சுரேஷ் எழுதிய இந்த சிறிய நூல் மேற்கத்திய தத்துவப் போக்கின் சுருக்க்மான வரலாறு. சாக்ரடீஸ் காலம் முதல் தெரிதா காலம் வரை அலசும் அற்புத நூல். பின்நவீனத்துவத்தைப் பின் பற்றி பல நூல்கள் எழுதியவர். ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ (1999), ‘அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), ‘சிலந்தி’ (2001), ‘யுரேகா என்றொரு நகரம்'(2002), ’37′(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ (2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன. ரூ.70/-

தியான யாத்திரை

ஆசிரியர் – அஜயன் பாலா ரூ. 70 இமயமலையின் புண்ணியதலங்களான ஹரித்துவார் கேதார்நாத் பத்ரிநாத் ,கங்கோத்ரி, மற்றும் கோமுக் ஆகிய இடங்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா யோகா சாதகர்களுடன் ஆசிரியர் மேற்கொண்ட பயண அனுபவமே இந்நூல். கண் முன் இமய மலையை காட்சிகளாக கொண்டுவந்து நிறுத்தி இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பையும் அவ்ற்றின் பின்னால் புதைந்துகிடக்கும் மகத்தான் ரகசியங்களையும் பற்றி பேசுகிறது இந்நூல்

தமிழிசை வரலாறு

ஆசிரியர் – ந.மம்முது விலை- 100 தமிழிசை குறித்து சமீபத்தில் வந்துள்ள ஒரே நூல். தமிழிசையின் ஆதார பண்களாகிய ஏழ்பெரும்பாலை மற்றும் ஐந்திசை பண்கள் பற்றியும் தமிழர்களின் இசைக்கருவிகள் பற்றியும் தமிழிசை சான்றோர்கள் பற்றியும் நமக்கு அழகு தமிழில் விவரிப்பதோடு தமிழிசையின் வரலாற்றையும் எளிய தமிழில் நமக்குள் கடத்தும் இந்நூல் தமிழ பண்ப்பாட்டின் பொக்கிஷம்

சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்

ஆசிரியர்- அஜயன் பாலா கட்டுரை விலை- 120 வாசிப்புகள், அவதானிப்புகள், நட்புகள், மற்றும் பயணங்களினூடே தான் பெற்ற அனௌபவங்களையும் கலை , இலக்கியம், சினிமா வில் தன்னை பாதித்த ஆளுமைகள் குறித்தும் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு

கடவுள் ஒரு கற்பனையே

புரட்சிகர மனித வரலாறு ஏ.எஸ்.கே ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸை பற்றி சிறிதும் பெரிதுமாகப் பல நூல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னையின் சமீபத்திய 50 ஆண்டு கால மாற்றங்களைச் சொல்லும் சிறிய நூல். சென்னையில் ஒருவர் தனியாக ரயில் வைத்திருந்தார் என்கிற தகவலில் இருந்து சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மிருகக் காட்சிசாலையில் இருந்த எம்.ஜி.ஆர். வளர்த்த சிங்கம் வரை பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறது. ஒரு நகரம் நம் கண் முன்னாலேயே எப்படி மாறிப் போயிருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவைக்கும் விறுவிறுப்பான நூல்.

இந்தியாவில் சாதிகள்

டாக்டர் அம்பேத்கர் உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. ரூ. 100.00

ஒற்றை வைக்கோல் புரட்சி

மசானபு ஃபுகோகா தமிழில் :பூவுலகின் நணபர்கள் புதிதாய் வருபவர்கள் இயற்கை வேளாண்மை உணர்வதற்கு ஏற்ற நூல். ரூ.130/-